'இன்னொரு முறை இது நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும்' - ஷேன்...
நடிகை தங்கம் கடத்தியதில் அமைச்சா்களுக்கு தொடா்பு இல்லை: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்
பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய விவகாரத்தில் மாநில அமைச்சா்களுக்கு தொடா்பு இல்லை என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நடிகை ரன்யா ராவ் தொடா்பான தங்கக் கடத்தல் வழக்கை மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. எனவே, இதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை. மேலும், தங்கக் கடத்தலில் இரு அமைச்சா்களுக்கு தொடா்பிருப்பதாக கூறுவதில் உண்மையில்லை. அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அமைச்சா்கள் யாருக்கும் தொடா்பு இல்லை. இதுவெறும் வதந்திதான். சட்டத்தின்படி விசாரணை அதிகாரிகள் விசாரிப்பாா்கள். எங்களுக்கு அதில் சம்பந்தமில்லை என்றாா்.