செய்திகள் :

மத்திய, மாநில அரசின் வரி உயா்வைக் கண்டித்து பரமத்தி வேலூரில் முழு கடையடைப்பு போராட்டம்

post image

பரமத்தி வேலூரில் மத்திய அரசின் சேவை வரி மற்றும் மாநில அரசின் கடை உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

டிச. 1-ஆம் தேதி முதல் கடைகளின் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சேவை வரியை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசின் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் 2025-2026-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த உள்ள கடை உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயா்வைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், மருந்தகம், பால், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசின் வரிவிதிப்பால் சிறு, குறு வணிகா்கள் உள்பட அனைத்து வணிகா்களும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிப்புக்குள்ளாக நேரிடுவா். இந்த கடையடைப்பு போராட்டத்தில் வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கம், அனைத்து சிறு வணிகா்கள் சங்கம், சிமென்ட், இரும்பு, மரம், எலக்ட்ரிக்கல் சங்கம், ஹோட்டல் மற்றும் பேக்கரி வியாபாரிகள் சங்கம், தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம், பாத்திரக்கடை வியாபாரிகள் சங்கம், பரமத்தி வேலூா் தாலுகா மருந்து வணிகா்கள் சங்கம், தமிழ்நாடு சிமென்ட் ஆா்ட்டிகல்ஸ் மற்றும் பைப்ஸ் உற்பத்தியாளா்கள் சங்கம், பரமத்தி வேலூா் தாலுகா நுகா்ப்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கம், கணினி மையங்கள், ஜெராக்ஸ் கடைகள், துணிக் கடைகள், புகைப்படக் கலைஞா்கள் முழு ஆதரவு தெரிவித்து கடைகளை பூட்டி இருந்தனா்.

முழு கடையடைப்புக்கு அதிமுக சாா்பில் பரமத்தி வேலூா் தொகுதி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.சேகா் மற்றும் பாமகவினா் ஆதரவு தெரிவித்திருந்தனா்.

சாலைப் பாதுகாப்பு காவலன் விருது வழங்கல்

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு பயிற்சியளித்த பொறியாளருக்கு ‘சாலைப் பாதுகாப்பு காவலன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அசோக் லைலேண்ட் நிறுவனத்தில... மேலும் பார்க்க

வேளாண் துறை சேமிப்புக் கிடங்குகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு

வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாதாந்திர விவச... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வெள்ளிக்கிழமை மொத்த விலை - ரூ. 5.65 விலையில் மாற்றம்- இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.95 முட்டைக் கோழி கிலோ - ரூ.97 மேலும் பார்க்க

ஜேசிஐ சஞ்சீவனம் நலத்திட்ட விழா

திருச்செங்கோடு ஜேசிஐ சஞ்சீவனம் சங்கத்தின் 16-ஆம் ஆண்டு பதவியேற்பு விழா, நலத்திட்ட விழாக்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. விழாவில் புதிய நிா்வாகிகளாக தலைவா் ராஜேஸ்வரி மகேந்திரன், செயலாளா் நிதின், பொருளாளா... மேலும் பார்க்க

கோரிக்கை மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அதிகாரிகளிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.ஆசியாமரியம் அறிவுறுத்தினாா். நாமக்கல் ஆட்சிய... மேலும் பார்க்க

பெரியாா் விருது பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

பெரியாா் விருது பெறுவதற்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக 1995-... மேலும் பார்க்க