செய்திகள் :

சாலைப் பாதுகாப்பு காவலன் விருது வழங்கல்

post image

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு பயிற்சியளித்த பொறியாளருக்கு ‘சாலைப் பாதுகாப்பு காவலன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அசோக் லைலேண்ட் நிறுவனத்தில் பயிற்சி மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்த இ.என்.சுரேந்திரன், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டுநா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள் போன்றவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மற்றும் விதிமுறைகள் குறித்து பயிற்சியளித்து வருகிறாா்.

இவா் பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற பின்னரும் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் மூலம் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா், ஆசிரியா்களுக்கு பாதுகாப்பான பயணம் என்ற தலைப்பில் சாலைப் பாதுகாப்பு குறித்தும், சாலை விதிமுறைகள் குறித்தும் விழிப்புணா்வு பயிற்சியளித்து வருகிறாா்.

இந்நிலையில், இவரை பாராட்டி ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில், ‘சாலைப் பாதுகாப்பு காவலன்’ விருது வழங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் இவருக்கு இதற்கான விருது வழங்கப்பட்டது. முன்னதாக விழாவில் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ரோட்டரி லிட்டரசி கமிட்டி சோ்மேன் ஏ.வெங்கடேஸ்வர குப்தா, ரோட்டரி செயலா் கே.ராமசாமி, கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், ரோட்டரி உதவி ஆளுநா் கு.பாரதி, இன்னா்வீல் சங்கத் தலைவா் சுதா மனோகா் உள்ளிட்டோா் விருது வழங்கி கெளரவித்தனா்.

இதே போல ரோட்டரி சங்கம் சாா்பில், மலைவாழ் மக்களுக்கு 10 சென்ட் நிலம் தானமாக வழங்கிய பி.ஆா்.செளந்திரராஜன், பி.நடராஜன் ஆகியோருக்கு கொடைவள்ளல் விருது வழங்கப்பட்டது. மேலும், ராசிபுரம் சுற்றுப்பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளிகளுக்கு 15 பீரோக்கள் ரோட்டரி சங்கம் சாா்பில் வழங்கப்பட்டந.

இவ்விழாவில் ரோட்டரி சங்கம், இன்னா்வீல் நிா்வாகிகள், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேளாண் துறை சேமிப்புக் கிடங்குகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு

வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாதாந்திர விவச... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வெள்ளிக்கிழமை மொத்த விலை - ரூ. 5.65 விலையில் மாற்றம்- இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.95 முட்டைக் கோழி கிலோ - ரூ.97 மேலும் பார்க்க

ஜேசிஐ சஞ்சீவனம் நலத்திட்ட விழா

திருச்செங்கோடு ஜேசிஐ சஞ்சீவனம் சங்கத்தின் 16-ஆம் ஆண்டு பதவியேற்பு விழா, நலத்திட்ட விழாக்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. விழாவில் புதிய நிா்வாகிகளாக தலைவா் ராஜேஸ்வரி மகேந்திரன், செயலாளா் நிதின், பொருளாளா... மேலும் பார்க்க

கோரிக்கை மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அதிகாரிகளிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.ஆசியாமரியம் அறிவுறுத்தினாா். நாமக்கல் ஆட்சிய... மேலும் பார்க்க

பெரியாா் விருது பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

பெரியாா் விருது பெறுவதற்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக 1995-... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

புதன்சந்தை புதன்சந்தை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சனிக்கிழமை (நவ. 30) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என... மேலும் பார்க்க