செய்திகள் :

'மனதை உருக்கிய ஒரு படமாக இருந்தது'- `டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைப் பாராட்டிய தமிழ் குமரன்

post image

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்,  நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் படம் `டூரிஸ்ட் ஃபேமிலி'.

இந்தப் படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சிறப்பு காட்சியில் படத்தைப் பார்த்த  லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழ் குமரன்  `டூரிஸ்ட் ஃபேமிலி' படக்குழுவைப் பாராட்டி இருக்கிறார்.

தமிழ் குமரன்
தமிழ் குமரன்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “ டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது. மனதையும் உருக்கிய ஒரு படமாக அமைந்தது. சசிகுமார், சிம்ரன் மற்றும் யோகி பாபு ஆகியோரின் நடிப்பு மிகவும் புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர்.

குறிப்பாக முள்ளி தாஸ் (கமலேஷ்) என்கிற கதாபாத்திரம் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. முதல் திரைப்படத்திலேயே அற்புதமான கதை மற்றும் நகைச்சுவையை வழங்கிய இயக்குநர் அபிஷன், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், இந்த அருமையான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

மில்லியன் டாலர்ஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள "டூரிஸ்ட் ஃபேமிலி" மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்! கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று கொண்டாட வேண்டிய படம் இது” என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

Ajith: "மனதளவில் மிடில் கிளாஸ்தான்; சூப்பர் ஸ்டார், தல பட்டங்கள் என்றுமே வேண்டாம்" - அஜித் குமார்

நடிகர் அஜித்குமார் நேர்காணல், திரைப்பட விழாக்களில் பல ஆண்டுகளாகவே கலந்துகொள்வதில்லை. சமூக வலைத்தளங்களில்கூட அவர் இருப்பதில்லை.சினிமாவில் நடிப்பதைத் தாண்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை, கார் ரேஸிங் எனத் தன... மேலும் பார்க்க

HBD Swarnalatha: "ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சொர்ணா அங்கப் போய்டுவா!" - அண்ணன் ராஜசேகர் பேட்டி

ஸ்வர்ணலதா... 'குயில் பாட்டு', 'மாலையில் யாரோ', 'ஆட்டமா தேரோட்டமா', 'முக்காலா', 'போறாளே பொன்னுத்தாயி', 'மெல்லிசையே', 'என்னுள்ளே என்னுள்ளே' என நம்முள்ளே ஊடுருவிய உன்னதக்குரல். எல்லா பாடல்களும் ஃபேவரைட்ஸ... மேலும் பார்க்க

"எனக்கு Video Games பிடிக்கும்; இப்ப Red Dead Redemption; அடுத்து..." - பட்டியல் போடும் பூஜா ஹெக்டே

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படத்தில்,பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், 'டாணாக்காரன்' தமிழ் எனப் பலரும் நடித்துள்ளனர்.சந்தோஷ... மேலும் பார்க்க

HIT 3: "எனக்கு ஸ்பைடர் மேன் என்றால் சிவகார்த்திகேயன்; கேப்டன் அமெரிக்கா என்றால் சூர்யா சார்" - நானி

நானி நடித்திருக்கும் 'ஹிட்: தி தேர்டு கேஸ்' (HIT: The Third Case) திரைப்படம் மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. 'ஹிட்' திரைப்பட யுனிவர்ஸின் மூன்றாவது பாகமாக இது உருவாகியுள்ளது. இதில்... மேலும் பார்க்க