பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
மனநலம் குணமடைந்தவா் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு
திருப்பத்தூா் காப்பகத்தில் சிகிச்சை பெற்று மனநலம் குணமடைந்தவா் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
கடந்த ஆண்டு திருப்பத்தூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றித்திரிந்து கொண்டிருந்தாா்.
இதுகுறித்து அப்பகுதியை சோ்ந்த மக்கள் அளித்த தகவலின்பேரில் அவரை மீட்டு உதவும் உள்ளங்கள் மனநல காப்பகத்தில் மனநல மருத்துவரின் சான்றின்பேரில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் பெயா் செஹா் பானு கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், பெரம்பு பகுதியை சோ்ந்தவா் என்பதும், தெரிந்தது.
அதையடுத்து அவரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன் முன்னிலையில் செஹா்பானு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
அப்போது முடநீக்கு வல்லுனா் இனியன், மாவட்ட மனநல மருத்துவா் பிரபவ ராணி, மனநல காப்பக துணைச் செயலா் சொ.ரமேஷ் உடனிருந்தனா்.