செய்திகள் :

மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள பாட்னா பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு!

post image

பிகார் மாநிலத்தின் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தினுள் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

பாட்னா பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தல் இன்னும் சில நாள்களில் அங்கு நடைபெறவுள்ள நிலையில் இன்று (மார்ச்.5) பல்கலைக்கழக வளாகத்தினுள் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் தர்பாங்கா கட்டடத்தின் அருகிலுள்ள பொருளாதாரத் துறையின் நூலகத்தின் வாசலில் பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது. இதனால் உண்டான அதிர்வில் நூலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் ஆசிரியர் ஒருவரின் காரின் கண்ணாடிகளும் உடைந்து சிதறின.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த பிராபாஹோர் காவல் துறையினர், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் குறித்து தங்களது விசாரணையைத் துவங்கியுள்ளனர். மாணவர் சங்கத் தேர்தலில் தங்களது ஆளுமையை காண்பிக்க சில மாணவர் குழுக்களினால் இது நிகழ்த்தப்பட்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 வீரர்கள் படுகாயம்!

இந்நிலையில், அந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மாணவர்கள் சிலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும், போலீஸார் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பை அதிகரித்ததுடன் வெடித்து சிதறிய வெடிகுண்டு பாகங்களைக் கைப்பற்றி அது எவ்வகையைச் சார்ந்தது என்பதை கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னதாக, வருகின்ற மார்ச் 29 ஆம் தேதி பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் தேர்தல் முடிவுகள் மார்ச் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வரவிருக்கும் தேர்தல்களுக்காக பல்கலைக்கழக துணைவேந்தர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மேலும், அங்குள்ள சுவர்களில் எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தேர்தலையொட்டி வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு காவல்துறையினர் கடுமையான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலையாகி ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது!

மகாராஷ்டிரத்தில் சிறையிலிருந்து ஜாமினில் வெளியானவுடன் ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித் தாக்கூர் என்ற நபர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈ... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்றும் முதல்வர் மமதா!

லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி உரையாற்றவுள்ளார்.பிரிட்டனின் வரலாற்று சிறப்புமிக்க கல்வி நிறுவனமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முத... மேலும் பார்க்க

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரியரை கைது செய்த சிபிஐ!

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு நபருக்கு இ-மெயில் மூலமாக வந்த செய்தியில் அவர் ஆர்தோடாக்ஸ் சர்ச்... மேலும் பார்க்க

நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 வீரர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.பலிவா பகுதியில் மனோஹர்பூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட சரந்தா வனப்பகுதியி... மேலும் பார்க்க

விரைவில் மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் 9வது புலிகள் காப்பகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் அம்மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகமா... மேலும் பார்க்க

28 சிறுமிகள் உள்பட மாயமான 39 குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

புது தில்லியில் கடந்த 2 மாதங்களில் காணாமல்போன 28 சிறுமிகள் உள்பட 39 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு தில்லி மாவட்டத்தின் ரோஹினி நகரத்தில் கடந்த ஜனவரி 1 முதல் பிப்ர... மேலும் பார்க்க