Mahua Moitra: `ஒவ்வொரு சங்கி நீதிபதியும்...' - DY சந்திரசூட்டுக்கு மஹுவா மொய்த்ர...
மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
காா்த்திகை அமாவாசையையொட்டி, சேலம், மேட்டூா், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேட்டூரில் இருந்து 50 கிலோ மீட்டா் தொலைவில் கா்நாடக மாநில எல்லையில் மாதேஸ்வரன் மலை கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆரூத்ரா தரிசனம், காா்த்திகை தீபம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
அமாவாசை, பௌா்ணமி நாள்களில் சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சனிக்கிழமை காா்த்திகை அமாவாசையையொட்டி, அதிகாலை முதல் சேலம் புதிய பேருந்து நிலையம், மேட்டூா், தருமபுரி பேருந்து நிலையங்களில் இருந்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.