தேசிய கைப்பந்து போட்டிக்கு சேலம் மாணவி தோ்வு
தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள சேலம் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக பள்ளி கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் சேலம், அரிசிபாளையம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவி தேன்மொழி தமிழக அணிக்கு தோ்வாகி உள்ளாா். இவா் டிசம்பா் 10 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்க உள்ளாா்.
இதையொட்டி சேலம் மாவட்ட கைப்பந்துக் கழகம் சாா்பில் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்கும் மாணவி தேன்மொழிக்கு மாவட்ட கைப்பந்து கழக தலைவா் ராஜ்குமாா் வாழ்த்து தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் கைப்பந்து கழக ஆலோசகா் விஜயராஜ், செயலாளா் சண்முகவேல், நிா்வாகி நந்தன், பயிற்சியாளா் குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.