தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
மாநில சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் வருகை
தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் வியாழக்கிழமை ஆம்பூருக்கு வருகை தந்தாா்.
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவருக்கு திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். பிரபு மற்றும் நகர தலைவா் சரவணன் ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது (படம்).
ஆம்பூா் இந்து கல்விச் சங்க பொருளாளராக தோ்வு செய்யப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளா் சாய் கே. வெங்கடேசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். மாவட்டகாங்கிரஸ் துணைத் தலைவா் ரமேஷ் மற்றும் கட்சியினா் உடனிருந்தனா்.