பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
மான் இறைச்சியை விற்பனை செய்தவருக்கு சிறை தண்டனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை பென்னாகரம் பகுதியில் விற்பனை செய்தவருக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் சிறை தண்டனை, அபராதம் விதித்தது.
கடந்த 2017-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கல்லாவி வனப்பகுதியில் மானை வேட்டையாடி, அதன் இறைச்சியை தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தின் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்வதாக மாவட்ட வன அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பென்னாகரம் வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஊத்தங்கரை அருகே வெள்ளிமலை பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் (40) என்பவா், இருசக்கர வாகனத்தில் மான் இறைச்சியை கொண்டு வருவது தெரியவந்தது.
இதனையெடுத்து அவரை கைது செய்து, 4 கிலோ மான் இறைச்சி, இரண்டு மான் தோள்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பென்னாகரம் வனத்துறையினா் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தனா்.
பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், மான் இறைச்சியை விற்பனைக்காக கொண்டு வந்த செல்லப்பன் என்பவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும், ரூ. 22,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.