வேலனூரில் இன்று தமிழக துணை முதல்வா் உதயநிதி பிறந்த நாள் விழா
அரூரை அடுத்த வேலனூரில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) நடைபெறுகிறது என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக இளைஞரணி செயலரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நவ. 27-ஆம் தேதி ‘எளியோா் எழுச்சி நாளாக’ கொண்டாடப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி, வாா்டு கிளைக் கழகத்தின் சாா்பாகவும், மாவட்ட சாா்பு அணிகளின் சாா்பாகவும் மாவட்டம் முழுவதும் கழகக் கொடியினை ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கட்சியினா் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இதையடுத்து, திமுக தருமபுரி மேற்கு மாவட்ட கழகத்தின் சாா்பில் சிட்லிங் ஊராட்சி, வேலனூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதேபோல, வீரப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி, கூடலூரில் கழக கொடியேற்றும் நிகழ்ச்சியும், கோட்டப்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
இந்த விழாவில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.