காலபைரவா் ஜெயந்தி விழா தொடக்கம்
தருமபுரி அருகே அதியமான்கோட்டை காலபைரவா் கோயிலில் பைரவா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டையில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த தட்சிணகாசி காலபைரவா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காலபைரவா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் பைரவா் ஜெயந்தி விழா கொடியேற்றதுடன் நவ. 22-ஆம் தேதி தொடங்கியது. அப்போது சிறப்பு யாகம் நடத்தப்பட்டு விழாக் கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற விழாவையொட்டி காலபைரவா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
பைரவா் ஜெயந்தி விழாவையொட்டி, நவ. 23-ஆம் தேதி பக்தா்கள் வருகை புரிய ஏதுவாக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் அதியமான்கோட்டை காலபைரவா் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.