சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
'மாயமான முதல்வர் வீட்டு சமோசாவுக்கு சிஐடி விசாரணையா?' - இமாச்சல் அரசியலில் சலசலப்பு; நடந்தது என்ன?
இமாச்சல் பிரதேசத்தில் முதல்வராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் சுக்லா. முதல்வர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்குக் கொடுப்பதற்காக மூன்று பாக்ஸ் சமோசா ஆர்டர் செய்யப்பட்டது. ஐந்து நட்சத்திர உணவகம் ஒன்றிலிருந்து இந்த சமோசா ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது. சமோசா ஆர்டர் செய்து நீண்ட நேரமாகியும் ஆர்டர் செய்த சமோதா வந்து சேரவில்லை.
இதையடுத்து முதல்வர் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு போன் செய்து சமோசா இன்னும் வந்து சேரவில்லை என்று தெரிவித்தனர். உணவக ஊழியர்களோ ஏற்கனவே சமோசா விநியோகம் செய்யப்பட்டு விட்டதாகத் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் இல்ல அதிகாரிகள் இது குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
உடனே உணவகத்தில் இருந்து வந்த சமோசா எங்குச் சென்றது என்பது குறித்து விசாரிக்கும்படி சி.ஐ.டி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மாநில அரசின் இந்த விசாரணையை மக்கள் விரோத செயல் என்று பா.ஜ.க குற்றம் சாட்டி இருக்கிறது. இது குறித்து முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் அளித்த பேட்டியில், சமோசா காணாமல் போனது குறித்து சி.ஐ.டி விசாரணை நடத்துவது அபத்தமானது. ஏழை மக்கள் அதனை சாப்பிட்டால் என்னவாகிவிடப்போகிறது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான அமித் மால்வியா இது குறித்து வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், முதல்வரின் சமோசாவை எடுத்துச்சென்றது யார் என்பதை சி.ஐ.டி கண்டுபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ சத்பால் சிங் இது குறித்து அளித்த பேட்டியில், "இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் சரியாகக் கிடைக்கவில்லை. ஆனால், முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக, ஐந்து நட்சத்திர உணவகத்தில் இருந்து சமோசா ஆர்டர் செய்யப்பட்டு, அங்குச் சென்றடையாமல், வழியில் சிலர் சமோசாவைச் சாப்பிட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். சமோசா சாப்பிட்ட சம்பவம் அரசுக்கு எதிரானது என்றும், இமாச்சல் பிரதேசத்திற்கு எதிரானது என்றும் கூறி, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் வேடிக்கையான விஷயம். இமாச்சல் பிரதேசத்தில் பல்வேறு துறைகளில் பெரும் ஊழல்கள் நடக்கின்றன. முதல்வர் அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
விசாரணையில் சமோசாவை முதல்வர் வீட்டிலிருந்த ஊழியர்கள் சாப்பிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், சமோசா காணாமல் போனது குறித்து விசாரிக்கப்படவில்லை என்றும், சமோசா தவறுதலாக வீட்டுப் பாதுகாவலர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளனர். சமோசா மட்டுமல்லாது கேக்கும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs