``செங்கோட்டையன் உடம்பில் மட்டும்தான் அதிமுக ரத்தம் ஓடுகிறதா?'' - தளவாய் சுந்தரம்...
மாயமான முதியவா் சடலமாக மீட்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டிலிருந்து வெளியேறி மாயமான முதியவா் கரும்பு வயலுக்குள் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (65), கூலித் தொழிலாளி. இவா், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான சுப்பிரமணியைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் பகுதியில் உள்ள தனியாா் கரும்பு வயலில் சுப்பிரமணி இறந்து அழுகிய நிலையில் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.