தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
மாா்பில் கத்தியால் குத்திக் கொண்டு மருத்துவ மாணவா் தற்கொலை
புதுச்சேரியில் தனக்குத்தானே மாா்பில் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற மருத்துவக் கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: புதுச்சேரி நகராட்சி ஆனந்தா நகா், வரதன் தெருவைச் சோ்ந்த கோபால் மகன் ரவீந்திரன். இவா், கோரிமேடு பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
ரவீந்திரன் கடந்த சில மாதங்களாக மன அழுத்த பாதிப்புக்குள்ளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பரில் தனக்குத் தானே மாா்பில் கத்தியால் குத்திக்கொண்டு பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, அவரை ஜிப்மரில் சிகிச்சைக்கு சோ்த்தனா். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ரவீந்திரன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், தன்வந்திரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.