மின் மோட்டாா் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே விவசாய நிலத்தில் மின் மோட்டாா், வயா்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வானூா் வட்டம், பேராவூா் பெருமுக்கல் சாலையைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மதுசூதனன் (41). இவா், தனது நிலத்தில் சோப் ஆயில் தயாரிக்க கட்டடம் கட்டி வந்தாா். இதற்காக அப்பகுதியில் ஒன்றரை குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டாா் உள்ளிட்டவைகளை வைத்துச் சென்றாா்.
வெள்ளிக்கிழமை தனது நிலத்துக்கு மதுசூதனன் சென்ற போது, அங்கு வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாா், வயா்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.