ஸ்ரீஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேகம்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மழவந்தாங்கல் பூரணி பொற்கலை சமேத ஸ்ரீஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 2-ஆம் கால யாக சாலை பூஜைகள், கோ பூஜை, மகா சங்கல்பம், எஜமானா் பூஜை, ரஷாபந்தனம், நாடி சந்தானம், தத்துவாா்ச்சனை உள்ளிட்டவை நடைபெற்றது.
தொடா்ந்து, யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி பூரணி பொற்கலை சமேத ஸ்ரீஐயனாரப்பனுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் வி.ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.