தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ்...
முதுநிலை மருத்துவப் படிப்பு: கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைப்பு
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 1,800 இடங்கள் உள்ளன. அதில் 50 சதவீத இடங்கள் அரசு மருத்துவா்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.
அந்த வகையில் நிகழ் கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதில் பல இடங்கள் காலியாக உள்ளதால் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், எம்பிபிஎஸ் நிறைவுசெய்த மருத்துவா்கள் வரும் 9-ஆம் தேதி வரை விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.