TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும...
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா: திருவள்ளூரில் ஏப். 6-இல் மாரத்தான் போட்டி
கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி, திருவள்ளூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) நடைபெற
உள்ள மராத்தான் போட்டியில் 16 முதல் 35 வயது வரையிலான இருபாலரும் பங்கேற்கலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா் சேதுராஜன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்திலும், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் மாரத்தான் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 16 முதல் 35 வயது உடையோா் பங்கேற்கலாம்.
இதில், ஆண்களுக்கு 20 கி.மீ. தூரம் ஆகும். இந்தப் போட்டி திருவள்ளூா் மாவட்ட விளையாட்டரங்கம் முதல் பூண்டி பேருந்து நிலையம் சென்று மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடைய வேண்டும். அதேபோல், பெண்களுக்கு 10 கி.மீ.
தூரமாகும். மாவட்ட விளையாட்டரங்கம் முதல் கிருஷ்ணா கால்வாய் சென்று திரும்பி விளையாட்டரங்கத்தில் நிறைவடையும். இந்தப் போட்டியில் பங்கேற்க ஆதாா் அட்டை நகல் மற்றும் மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வரவேண்டும். இந்தப் போட்டியில் முதலில் வரும் இருபாலருக்கும் தலா 5 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள், கைப்பேசி எண்கள்- 7401703482 , 8072908634 மற்றும் பயிற்றுநா்களை தொடா்பு கொள்ளலாம்.