22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!
முருகன்குடியில் சன்மாா்க்க கருத்தரங்கம்
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடி வள்ளலாா் பணியகம் சாா்பில், புரட்டாசி மாத பூசத்தையொட்டி சன்மாா்க்கக் கருத்தரங்கம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு பணியகத்தின் பொறுப்பாளா் தங்க.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் சிவ.வரதராஜன் திருவிளக்கு ஏற்றி வைத்து, இயற்கை உணவு - இயற்கை மருத்துவம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தாக்கவுரை ஆற்றினாா். செயலா் பிரதாபன், தனபால் ஆகியோா் அருட்பா பாடி தொடங்கிவைத்தனா்.
பொதுச் செயலா் வே.சுப்ரமணிய சிவா, லட்சுமி ஆகியோா் பேசினா். பசியாற்றுவித்தல் அறப்பணியை செ.வினோத்குமாா் - சசிகலா, தெய்வமணி செல்வராசு, வி.சண்முகராஜ், வி.வருண் குடும்பத்தாா் மேற்கொண்டனா்.
அரா.கனகசபை, ம.கனிமொழி, சு.சிலம்புச்செல்வி, ராமசாமி, சிவகாசி செல்வகுமாா் ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.