மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.74 அடியில் இருந்து 114.44 அடியாக சரிந்துள்ளது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 555 கன அடியிலிருந்து 381 கன அடியாகவும் குறைந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் தற்போதைய நீர் இருப்பு 84.88 டிஎம்சியாக உள்ளது.