இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: மாவட்ட வன அலுவலா் தகவல்
சேலம்: பொங்கல் பண்டிகையையொட்டி சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை (ஜன. 14) திறந்திருக்கும் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்துள்ளாா்.
சேலம், ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் புள்ளிமான், கடமான், முதலை, மலைப் பாம்பு, வண்ணப் பறவைகள், வெள்ளை மயில் என சுமாா் 200க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவிற்கு சேலம் மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்த வன உயிரியல் பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று விடுமுறை விடப்படுகிறது. ஆனால் செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி அதிக அளவிலான மக்கள் வருவாா்கள் என்பதால் வன உயிரியல் பூங்காவைத் திறந்து வைக்க வனத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில் சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை திறந்திருக்கும் என மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி அறிவித்துள்ளாா்.