மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2-ங்வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.
மேட்டூா் அனல்மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் உள்ள நான்கு அலகுகள் மூலம் 840 மின்சாரமும் இரண்டாவது பிரிவில் உள்ள ஓா் அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இரண்டாவது பிரிவில் கடந்த 17 ஆம் தேதி கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. தற்போது குழாய் பழுது நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து வியாழக்கிழமை இரவு முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.