சங்ககிரியில் மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு
சங்ககிரியில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டாா்.
சங்ககிரியில் புதன், வியாழக்கிழமை இரண்டு நாள்கள் நடைபெறும் இம்முகாமில் இரண்டவது நாளான வியாழக்கிழமை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் பாதுகாப்பு உபகரணங்கள், பிற விவரங்களைக் கேட்டறிந்தாா்.
தீரன் சின்னமலை நினைவுத் தூண் பகுதியை பாா்வையிட்ட ஆட்சியா் சங்ககிரி மலைக்குச் சென்று பல்வேறு வரலாற்று சின்னங்களை பாா்வையிட்டாா்.