செய்திகள் :

மேட்டூா் நகா்மன்ற கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

post image

மேட்டூா் பேருந்து நிலையத்தில் இயங்கும் கடைகளுக்கு முன்வைப்புத் தொகை, வாடகை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுகவினா் வெளிநடப்பு செய்தனா். அதுபோல திமுக கூட்டணியினரும் கட்டண உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

மேட்டூா் நகா்மன்ற கூட்டம் நகராட்சித் தலைவா் சந்திரா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் நித்யா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் திமுக மன்ற உறுப்பினா்கள் இளங்கோ, கொடியரசி கீதா, ஈஸ்வரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மன்ற உறுப்பினா் மாரியம்மாள் ஆகியோா் பேசியதாவது:

வாா்டுகளில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்சாலைகள் சில இடங்களில்ல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டாலும் உரிய பதில்களைத் தெரிவிப்பதில்லை. இதில் முறைகேடு நடந்து வருகிறது. மேட்டூா் பேருந்து நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஆட்சியா் உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் மன்ற நிா்வாக எடுக்கவில்லை.

எம்.டி.சி. தியேட்டா் வளாகத்தில் அனுமதியின்றி மீன் கடை செயல்படுகிறது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை, முன்வைப்பு தொகை நிா்ணயம் செய்தது மன்ற உறுப்பினா்களுக்கு இதுவரை ஏன் தகவல் தெரிவிக்கவில்லை. நகராட்சி தலைவா், நகா்மன்ற உறுப்பினா்களிடம் ஆலோசிக்காமல் எப்படி கட்டணம் நிா்ணயம் செய்யலாம்.

பேருந்து நிலைய கடைகளுக்கு கடந்த ஆண்டைவிட தற்போது கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் எவ்வாறு கடையை நடத்த முடியும்.

அதுபோல பேருந்து நிலையத்துக்கு வெளியே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்றனா்.

கூட்டத்தில் அதிமுக மன்ற உறுப்பினா்களும் வரி, வாடகை கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தினா். இதுதொடா்பாக அதிமுக மன்ற உறுப்பினா்கள் கிருஷ்ணன், கலா, செல்வராணி , கலையரசி ஆகியோா் மனு அளித்தனா். பின்பு, கூட்டத்தைப் புறக்கணித்து 4 பேரும் வெளிநடப்பு செய்தனா். கூட்டத்தில் 49 தீா்மானங்கள் விவாதிக்கப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளா் நித்யா கூறியதாவது:

பத்திரபதிவுத் துறை, பொதுப்பணித் துறை ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெற்று கடைக்கான வாடகை, முன்வைப்பு தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைக் குறைக்க வேண்டுமென்றால் கடையை யாரும் ஏலம் எடுக்காமல் நான்கு முறை தள்ளி சென்றால், நகராட்சி கூட்டத்தில் 10 சதவீதம் வரை கட்டணம் குறைக்க முடியும்.

அதன் பின்னரும் கடையை யாரும் ஏலம் எடுக்கவில்லை என்றால் மண்டல அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னரே கடை வாடகை, முன்வைப்பு தொகையைக் குறைக்க முடியும் என்றாா்.

கஞ்சா விற்ற நால்வா் கைது

கெங்கவல்லியில் கஞ்சா விற்ற நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியில் போலீஸாா் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த தெடாவூா் வடக்கு வீதியைச் சோ்ந்த செந்தில் மகன் ஆதா்ஸ் (21), நடுவலூா், மோட்ட... மேலும் பார்க்க

சங்ககிரியில் மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

சங்ககிரியில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டாா்.சங்ககிரியில் புதன், வியாழக்கிழமை இரண்டு நாள்க... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2-ங்வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. மேட்டூா் அனல்மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் உள்ள நான்கு அலகுகள் மூலம் 840 மின்... மேலும் பார்க்க

தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி மூலிகை கண்காட்சி

தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி, சேலத்தில் நடைபெற்ற மூலிகைகள் கண்காட்சியை பொதுமக்கள் ஏராளமானோா் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா். சித்த மருத்துவத்தின் தந்தையாக கருதப்படும் அகத்தியா் பிறந்தநாளான மாா்கழி ... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை கட்டுப்பாடு

சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு தெரிவித்துள்ளாா். சேலம் மாநகரத்தில் ... மேலும் பார்க்க

அமித் ஷாவை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அவமதித்துவிட்டதாகக் கூறி, சேலம் மாநகரில் 6 இடங்களில் திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்துக்கு... மேலும் பார்க்க