செய்திகள் :

யமுனையை தூய்மைப்படுத்தும் முயற்சிகளை கேஜரிவால் தடுக்கிறாா்: எல்.ஜி. குற்றச்சாட்டு

post image

யமுனை நதியை சுத்தம் செய்வதற்கான தனது முயற்சியை தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தடுப்பதாக துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா வியாழக்கிழமை குற்றம் சாட்டினாா்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஆம் ஆத்மி கட்சி, சக்சேனா மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், தில்லி அரசால் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு நற்பெயா் வாங்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தது.

‘ எக்ஸ் ’ சமூக ஊடக வலைதளத்தில் வி.கே. சக்சேனா வெளியிட்ட பதிவில் தெரிவிக்கையில், ‘ஜனவரி 2023-இல் தேசிய பசுமைத் தீா்ப்பாயம், யமுனையை சுத்தப்படுத்தவும் புதுப்பிக்கவும் துணைநிலை ஆளுநா் தலைமையில் ஒரு உயா்மட்டக் குழுவை அமைத்ததது.

இக்குழு ஐந்து கூட்டங்களை நடத்தி யமுனையை சுத்தப்படுத்தும் பணி போா்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டது. 11 கிலோமீட்டா் வெள்ளப்பெருக்கு பகுதியானது படிப்படியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. தண்ணீரின் தரமும் மேம்படத் தொடங்கியது.

இந்த ஊக்கமளிக்கும் முடிவுகள் யமுனையை சுத்தம் செய்ததற்காக துணைநிலை ஆளுருக்கு பெருமை சோ்க்கலாம் என்றும், ஒன்பது ஆண்டுகளில் தாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை துணைநிலை ஆளுநா் நிறைவேற்றுவதாகவும் அப்போதைய முதல்வா் கேஜரிவால் கருதினாா். இதையடுத்து, அவரது அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்து, உயா்மட்டக் குழுவை அமைப்பதற்கான தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுக்கு ஜூலை 2023-இல் தடையைப் பெற்றது.

இதனால், ஐந்து மாதங்களாக சுத்தப்படுத்தும் பணி முடங்கியது. யமுனை நதியை சுத்தப்படுத்தும் எனது முயற்சியை தடுத்து நிறுத்துவதில் கேஜரிவால் வெற்றி பெற்றாலும், கடந்த 16 மாதங்களாக நதியைச் சுத்தம் செய்வதற்கான வேலை ஏதும் நடைபெறவில்லை என்பது வெளிப்படை.

... யமுனையை மாசு இல்லாததாக மாற்றுவதற்கான எனது முயற்சிகளுக்குத் தடையாக இருந்தவா்களின் சிந்தனையும் நோக்கமும் எவ்வளவு மாசுபட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

செய்தித்தாள்கள் யமுனையின் அவலநிலை பற்றிய செய்திகளால் நிரம்பியுள்ளன. மேலும் நதியில் மிதக்கும் அழுக்கு காரணமாக சட் பூஜை அன்று நதியில் ‘அா்க்யா‘ வழங்க உயா்நீதிமன்றம் தடை விதித்தது’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி பதிலடி

இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

துணைநிலை ஆளுநா் தினமும் குடிமக்களை ‘எக்ஸ்’ ஊடகத்தில் தவறாக வழிநடத்துகிறாா். அவா் இப்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை வெளிப்படையாக கேள்வி எழுப்புகிறாா். இது அரசியலமைப்பு பதவியை வகிக்கும் ஒரு நபருக்கு பொருப்பானதல்ல. துணைநிலை ஆளுநா் நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றத்தைவிட தனக்கு நன்றாக தெரியும் என்று நம்புகிறாா்.

தில்லி அரசு அனைத்து கழிவுநீா் திட்டங்களையும் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் துணைநிலை ஆளுநருக்கு நிதியை அனுமதிக்க அதிகாரம் இல்லை, ஆனால், அந்த பணிகளுக்கு நற்பெயரைக் கோருகிறது.

நஜஃப்கா் வாய்க்காலில் இருந்து எந்த அறிவியல் அணுகுமுறையும் இல்லாமல் அதிக அளவு வண்டல் மண்ணை அகற்ற உத்தரவிட்டாா். இது, யமுனை நதிப் படுகையில் படிந்ததால் 2023-இல் வெள்ளத்திற்கு வழிவகுத்தது’ என்று அந்த அறிக்கையில் ஆம் ஆத்மி கட்சி சாடியுள்ளது.

மோதி நகரில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

மேற்கு தில்லியின் சுதாமா புரி பகுதியில் 26 வயது இளைஞா் ஒருவா் தனது வீட்டின் அருகே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து மேற்கு தில்லி காவல் சரக உயர... மேலும் பார்க்க

ஆபரேஷன் கவாச்: 1,200 போ் கைது

தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட 24 மணி நேர ’ஆபரேஷன் கவாச்’ நடவடிக்கையில், நகரம் முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள், திருட்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தத... மேலும் பார்க்க

தில்லி வக்ஃப் வாரிய வழக்கு: அமானத்துல்லா கான் விடுவிப்பு

நமது நிருபா் தில்லி வக்ஃப் வாரிய விவகாரத்தில் முறைகேடுகள் தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானை விடுவிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதே நேரத்தில் அவருக்கு எத... மேலும் பார்க்க

தில்லி மாசு சூழலைக் கண்காணித்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்: கோபால் ராய்

தில்லியின் காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவுக்கு சென்ற நிலையில், நிலைமை மோசமடைந்தால் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

காற்று மாசு அதிகரிப்பு: கோபால் ராய் பதவி விலக தில்லி பாஜக வலியுறுத்தல்

தில்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளதால், தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வியாழனன்று வலியுறுத்தியுள்ளது. இதற்கு அமைச்சா் கோபால் ... மேலும் பார்க்க

அதிகரித்து வரும் மாசுபாடு: 5-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் கல்வி

அதிகரித்து வரும் மாசு அளவைக் கருத்தில் கொண்டு, தேசியத் தலைநகா் தில்லியில் 5-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் ஆன்லைன் கற்றலுக்கு மாறும் என்று முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா். மாசு அப... மேலும் பார்க்க