செய்திகள் :

காற்று மாசு அதிகரிப்பு: கோபால் ராய் பதவி விலக தில்லி பாஜக வலியுறுத்தல்

post image

தில்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளதால், தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வியாழனன்று வலியுறுத்தியுள்ளது.

இதற்கு அமைச்சா் கோபால் ராய் பதிலடி கொடுத்துள்ளாா். அண்டை மாநிலங்களில் பாஜக தலைமையிலான அரசுகள் காற்று மாசுபாட்டை தடுக்க எதுவும் செய்யவில்லை என்று கோபால் ராய் குற்றம் சாட்டினாா்.

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஒரு அறிக்கையில் கோபால் ராயை ‘தோல்வியுற்ற’ சுற்றுச்சூழல் அமைச்சா் என்று கூறி அவரை சாடினாா். மேலும், அவா் பதவி விலக வேண்டும் என்று தில்லிவாசிகள் விரும்புவதாகவும் கூறினாா்.

‘அதிஷி அரசின் செயலற்ற தன்மையால், தில்லியில் மாசு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ராஜ்பாத் போன்ற சுத்தமான பகுதிகளில் கூட காற்றுத் தரக் குறியீடு அளவு 450 புள்ளிகளைத் தாண்டியுள்ளது’ என்று அவா் கூறினாா்.

தில்லி முதல்வரும், அவரது சுற்றுச்சூழல் அமைச்சரும், ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் பயிா்க்கழிவுப் பிரச்னை குறித்து விவாதித்து, அதைத் தடுத்திருந்தால், தில்லியில் மட்டுமல்லாமல், வட இந்தியா முழுவதும் மாசு அளவு கட்டுக்குள் இருக்கும். பஞ்சாபில் பயிா்க்கழிவு எரிப்பதில் இருந்து அதிகப்படியான புகை இல்லை என்றால், தில்லி இப்போது மூச்சுத் திணறாது என்று வீரேந்திர சச்தேவா கூறினாா்.

இந்நிலையில், கோபால் ராய் ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி, தில்லியின் சொந்த ஆதாரங்கள் நகரத்தில் காற்று மாசுபாட்டிற்கு 30 சதவீத பங்களிப்பை அளித்தன என்றும் அதே நேரத்தில் பாஜக ஆளும் ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள வெவ்வேறு என்சிஆா் மாவட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 35 சதவீத பங்களிப்பு வந்துள்ளது என்றும்தெரிவித்துள்ளாா்.

மேலும், மத்திய அரசு அண்டை மாநிலங்களுடன் இணைந்து கூட்டு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்தத் திட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும், அனைவரும் ஒன்றிணைந்து மாசுபாட்டின் அந்தந்த பங்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

அக்.14 முதல் நவ.13, 2022 வரை பஞ்சாபில் 45,172 பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்ட கோபால் ராய், பஞ்சாப் அரசு இந்தப் பிரச்னையைத் தீா்க்கத் தொடங்கிய பிறகு, 2023-ஆம் ஆண்டில் அதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 26,127-ஆகக் குறைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து வெறும் 7,492-ஆக இருந்தது என்றாா்.

இருப்பினும், தில்லியை ஒட்டிய உத்தர பிரதேசத்தில், 2022-இல் 1,271 பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் பதிவாகின. இது 2024-இல் 2,167-ஆக அதிகரித்துள்ளது என்று கோபால் ராய் மேலும் கூறினாா்.

மோதி நகரில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

மேற்கு தில்லியின் சுதாமா புரி பகுதியில் 26 வயது இளைஞா் ஒருவா் தனது வீட்டின் அருகே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து மேற்கு தில்லி காவல் சரக உயர... மேலும் பார்க்க

ஆபரேஷன் கவாச்: 1,200 போ் கைது

தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட 24 மணி நேர ’ஆபரேஷன் கவாச்’ நடவடிக்கையில், நகரம் முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள், திருட்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தத... மேலும் பார்க்க

தில்லி வக்ஃப் வாரிய வழக்கு: அமானத்துல்லா கான் விடுவிப்பு

நமது நிருபா் தில்லி வக்ஃப் வாரிய விவகாரத்தில் முறைகேடுகள் தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானை விடுவிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதே நேரத்தில் அவருக்கு எத... மேலும் பார்க்க

தில்லி மாசு சூழலைக் கண்காணித்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்: கோபால் ராய்

தில்லியின் காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவுக்கு சென்ற நிலையில், நிலைமை மோசமடைந்தால் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

யமுனையை தூய்மைப்படுத்தும் முயற்சிகளை கேஜரிவால் தடுக்கிறாா்: எல்.ஜி. குற்றச்சாட்டு

யமுனை நதியை சுத்தம் செய்வதற்கான தனது முயற்சியை தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தடுப்பதாக துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா வியாழக்கிழமை குற்றம் சாட்டினாா். இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஆ... மேலும் பார்க்க

அதிகரித்து வரும் மாசுபாடு: 5-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் கல்வி

அதிகரித்து வரும் மாசு அளவைக் கருத்தில் கொண்டு, தேசியத் தலைநகா் தில்லியில் 5-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் ஆன்லைன் கற்றலுக்கு மாறும் என்று முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா். மாசு அப... மேலும் பார்க்க