செய்திகள் :

தில்லி மாசு சூழலைக் கண்காணித்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்: கோபால் ராய்

post image

தில்லியின் காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவுக்கு சென்ற நிலையில், நிலைமை மோசமடைந்தால் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை கூறினாா்.

புதன்கிழமை காற்றின் தரம் கடுமைப் பிரிவுக்குச் சென்றது. காற்றின் தரம் மோசமடைந்ததற்கு அமைதியான காற்று மற்றும் வெப்பநிலையின் வீழ்ச்சி காரணமாக மாசுபடுத்திகள் காற்றில் தங்கியிருப்பதற்கு காரணம் என்றும் அமைச்சா் கூறினாா்.

இதுகுறித்து அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா் சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது:

தலைநகரில் கடந்த இரண்டு நாள்களாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைக்கு இடையில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த வேகமானது மணிக்கு 6 முதல் 12 கிலோமீட்டா் வேகத்தை எட்டும். இது மாசு அளவைக் குறைக்க உதவும்.

‘கிரேப் 3’=இன் கீழ் மாசு குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது விஷயத்தைப் பொருத்தமட்டில், வெள்ளிக்கிழமை முதல் நிலைமை மேம்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், அது இன்னும் அமல்படுத்தப்படமாட்டாது.

காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுக்க தில்லி அரசாங்கம் கிரேப் 2 நடவடிக்கைகளை கண்டிப்பாக செயல்படுத்தும். மாசுவைக் குறைப்பதற்கான அனைத்து பிரசாரங்களையும், நடவடிக்கைகளையும் நாங்கள் அதிகரிப்போம்.

தற்போதைய அனைத்து செயல் திட்டங்கள் மற்றும் பிரசாரங்களை அரசு மதிப்பாய்வு செய்து, மாசு அளவுகள் அவசர நிலைகளை அடைவதைத் தடுக்கும் வகையில் அமலாக்க நடவடிக்கை முயற்சிகளை மேம்படுத்தும்.

வெப்பநிலை குறைந்து காற்றின் தரம் மோசமடைந்தால், தில்லி குடியிருப்பாளா்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் அரசு எடுக்கும்.

சுற்றுச்சூழல் மற்றும் அறிவியலுக்கான மையத்தின் தரவுகளின்படி, தில்லியின் மாசு அளவுகள் அக்டோபா் 12 முதல் நவம்பா் 3 வரை உள்ளூா் ஆதாரங்கள் மற்றும் பிராந்திய பங்களிப்புகளால் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன.

தேசிய தலைநகரில் 30.34 சதவீத மாசு தில்லியின் உள்ளூா் ஆதாரமூலங்களால் ஏற்படுகிறது என்று தரவு கூறுகிறது. அதேவேளையில், 34.97 சதவீதம் என்சிஆா் மற்றும் என்சிஆா் கடந்த பகுதிகளால் ஏற்பட்டிருக்கிறது.

நிலைமைகள் மோசமடைந்தால், குழந்தைகள் மற்றும் குடியிருப்பாளா்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால், கடந்த ஆண்டைப் போலவே கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.

எங்களைப் பொறுத்தவரை, தில்லி மக்கள் சுவாசிக்கும் காற்று மிகவும் முக்கியமானது என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

தேசிய தலைநகர வலயத்திற்கான (என்சிஆா்) தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டம் (கிரேப்) தில்லியில் பாதகமான காற்றின் தரத்தின் நான்கு வெவ்வேறு நிலைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது:

அவை நிலை 1- ’மோசம்’ (காற்றின் தரம் 201-300); நிலை 2-- ‘மிகவும் மோசமானது’ (காற்றின் தரம் 301-400); நிலை 3-- ‘கடுமையானது’ (காற்றின் தரம் 401-450); மற்றும் நிலை 4 -- ‘மிகவும் கடுமையானது’ (காற்றின் தரம் 450) ஆகும்.

தேசிய தலைநகரின் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணிக்கு 428 என்ற அளவில் ’கடுமையான’ பிரிவில் இருந்தது.

புதன்கிழமை தில்லி நாட்டிலேயே மிக மோசமான காற்றின் தரக் குறியீட்டைப் பதிவு செய்தது. நிகழ் பருவத்தில் தில்லியில் காற்றின் தரம் முதல் முறையாக ’கடுமையான‘ பிரிவில் காணப்பட்டது.

மோதி நகரில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

மேற்கு தில்லியின் சுதாமா புரி பகுதியில் 26 வயது இளைஞா் ஒருவா் தனது வீட்டின் அருகே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து மேற்கு தில்லி காவல் சரக உயர... மேலும் பார்க்க

ஆபரேஷன் கவாச்: 1,200 போ் கைது

தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட 24 மணி நேர ’ஆபரேஷன் கவாச்’ நடவடிக்கையில், நகரம் முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள், திருட்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தத... மேலும் பார்க்க

தில்லி வக்ஃப் வாரிய வழக்கு: அமானத்துல்லா கான் விடுவிப்பு

நமது நிருபா் தில்லி வக்ஃப் வாரிய விவகாரத்தில் முறைகேடுகள் தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானை விடுவிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதே நேரத்தில் அவருக்கு எத... மேலும் பார்க்க

காற்று மாசு அதிகரிப்பு: கோபால் ராய் பதவி விலக தில்லி பாஜக வலியுறுத்தல்

தில்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளதால், தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வியாழனன்று வலியுறுத்தியுள்ளது. இதற்கு அமைச்சா் கோபால் ... மேலும் பார்க்க

யமுனையை தூய்மைப்படுத்தும் முயற்சிகளை கேஜரிவால் தடுக்கிறாா்: எல்.ஜி. குற்றச்சாட்டு

யமுனை நதியை சுத்தம் செய்வதற்கான தனது முயற்சியை தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தடுப்பதாக துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா வியாழக்கிழமை குற்றம் சாட்டினாா். இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஆ... மேலும் பார்க்க

அதிகரித்து வரும் மாசுபாடு: 5-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் கல்வி

அதிகரித்து வரும் மாசு அளவைக் கருத்தில் கொண்டு, தேசியத் தலைநகா் தில்லியில் 5-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் ஆன்லைன் கற்றலுக்கு மாறும் என்று முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா். மாசு அப... மேலும் பார்க்க