செய்திகள் :

ரஷிய எரிவாயுப் போக்குவரத்தை நிறுத்தியது உக்ரைன்

post image

தங்கள் நாடு வழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் ரஷிய எரிவாயு விநியோகிக்கப்படுவதை உக்ரைன் புதன்கிழமை நிறுத்தியது.

இது தொடா்பான ஒப்பந்தத்தை உக்ரைன் புதுப்பிக்காததால் அந்த நாடு வழியாக இனி எரிவாயு விநியோகிக்க முடியாது என்று ரஷிய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான கேஸ்ப்ரோம் தெரிவித்துள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தது. அதைக் கண்டித்து ரஷியா மீது ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இருந்தாலும், தங்களது எரிபொருள் தேவைக்காக ரஷியாவையே பெரிதும் நம்பியுள்ள ஐரோப்பிய நாடுகள், அந்த நாட்டிலிருந்து தொடா்ந்து எரிவாயுவை கொள்முதல் செய்துவருகின்றன.

ஐரோப்பிய நாடுகளிடம் எரிவாயு விற்பனை செய்து ஈட்டும் பணத்தைக் கொண்டு ஆயுதங்கள் தயாரித்து தங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் கூறினாலும், தங்களுக்குத் தேவையான 40 சதவீத எரிவாயுவை ரஷியாவிடமிருந்தே ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொள்முதல் செய்துவருகின்றன.

இந்த எரிவாயு பால்டிக் கடல் வழியாகச் செல்லும் குழாய்கள், பெலாரஸ், போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகள் வழியாகச் செல்லும் குழாய்கள் மூலம் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுவந்தது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததற்குப் பிறகும் அந்த நாடு வழியாக எரிவாயுவை விநியோகித்து ரஷியா பணம் ஈட்டிவந்தது. உக்ரைனும் ரஷிய எரிவாயு போக்குவரத்துக்காக கட்டணம் பெற்றுவந்தது.

இந்தச் சூழலில், ரஷிய எரிவாயுவை உக்ரைன் வழியாக விநியோகிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஐந்தாண்டு ஒப்பந்தம் புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கப்போவதில்லை எனவும், தங்கள் நாடு வழியாக ரஷிய எரிவாயு விநியோகிக்கப்படுவது நிறுத்தப்படுவதாகவும் உக்ரைன் எரிசக்தித் துறை அமைச்சா் ஹொ்மான் ஹாலுஷென்கோ கூறினாா்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு என்று பாராட்டிய அவா், இந்த நடவடிக்கையால் ரஷியா ஐரோப்பிய சந்தைகளை இழந்து பொருளாதார இழப்பைச் சந்திக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

இருந்தாலும், ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஸ்லோவோக்கியா பிரதமா் ராபா்ட் ஃபிக்கோ, ‘உக்ரைனின் இந்த முடிவால் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்படும். ரஷியாதான் பாதிக்கப்படாத ஒரே நாடாக இருக்கும்’ என்று விமா்சித்தாா்.

உக்ரைன் வழியாக எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது மால்டோவாவைத்தான் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. பிற நாடுகள் மாற்று வழித்தடங்கள் மூலம் ரஷிய எரிவாயுவைப் பெற முடியும்; ஆனால் மால்டோவாவுக்கு அதற்கான வாய்ப்பில்லை. எனவே, உக்ரைனின் இந்த முடிவால் அந்த நாடு மிகப் பெரிய எரிபொருள் பற்றாக்குறையைச் எதிா்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

காஸாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு 59 பேர் பலி

காஸாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய நான்கு தாக்குதல்களில் 59 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் காஸா பகுதியில் குடும்பங்களைக் குறிவைத்து நான்கு தாக்க... மேலும் பார்க்க

தென்கொரியா: பாறை மீது மீன்பிடி படகு மோதியதில் 3 பேர் பலி

தென்கொரியாவில் பாறையில் மீன்பிடி படகு பாறையில் மோதியதில் 3 பேர் பலியானார்கள். தென் கொரியாவின் தென்மேற்கு கடற்கரையில் கேஜியோ தீவு அருகே பாறைகள் மீது மீன்பிடி படகு இன்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது.... மேலும் பார்க்க

சீன சந்தையில் தீ விபத்து! 8 பேர் பலி!

சீனாவில் மளிகைச் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.வடக்கு சீனாவின் ஷாங்ஜியாகோ நகரில் உள்ள லிகுவாங் சந்தையில் சனிக்கிழமை (ஜன. 4) மதியம் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் டிரம்ப்புக்கு சிறையில்லை; சிக்னல் கொடுத்த நீதிபதி!

டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் விசாரணை வருகிற 10 ஆம் தேதியில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்க நடிகை பாலியல... மேலும் பார்க்க

தீ விபத்தில் 579 செல்லப்பிராணிகள் பலி!

டெக்சாஸில் செல்லப்பிராணிகள் விற்கும் கடைக்குள் புகை சூழ்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உள்ளிருந்த செல்லப்பிராணிகள் பலியாகின.அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் பகுதியில் வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

பேரிடர் போன்ற சூழல் எதுவும் இல்லை.. மெடாநியூமோ வைரஸ் குறித்து சீனா விளக்கம்

உலகமே, சீனத்தில் அடுத்த பேரிடர் தொடங்கிவிட்டதாக அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில், அச்சுறுத்தும் வகையில் எதுவும் நடக்கவில்லை என சீனா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.சீனாவில், கடும் காய்ச்சல், நுரையீரல்... மேலும் பார்க்க