செய்திகள் :

ராமநாதபுரம்: குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம்; சோகத்தில் திருவாடானை கிராமம்

post image

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ளது பாசிப்பட்டினம் கிராமம். இங்குள்ள மீனவர் காலணியில் வசித்து வரும் சித்திரவேல் என்பவரின் மகள் வைத்தீஸ்வரி (10), பாலமுருகன் என்பவரின் மகள் பிரித்தி (11) ஆகியோர் பாசிப்பட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்கள் இன்று (நவம்பர் 12) பள்ளிக்கூடம் செல்லாத நிலையில், 5ம் வகுப்பு பயிலும் அதே பகுதியைச் சேர்ந்த நாயகம் என்பவரின் மகள் சிறுமி நர்மதாவுடன் சேர்ந்து மாலை பள்ளிவாசல் ஊரணியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஊரணியில் இறங்கிய மூன்று சிறுமிகளும் எதிர்பாராத வகையில் நீரில் மூழ்கினர். இதில் மாணவிகள் வைத்தீஸ்வரியும், பிரித்தியும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து ஊரணியில் குளித்துக் கொண்டிருந்த சிலர் மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடிய சிறுமி நர்மதாவை ஊரணியிலிருந்து மீட்டதுடன், உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி.பட்டினம் போலீஸார் சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கூடம் செல்லாமல் பள்ளிவாசல் ஊரணிக்குக் குளிக்கச் சென்ற சிறுமிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் பாசிப்பட்டினம் கிராமத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுரத்தில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் விடுதியிஸ் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கிப் படி... மேலும் பார்க்க

சேலம்: கஞ்சா வழக்கு கைதியை பாலியல் வதை செய்த சக கைதிகள்; அலட்சியமாக இருந்த சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட்

சேலம் ஆத்தூரில் மாவட்ட கிளைச் சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனைப் பெற்றுவரும் கை... மேலும் பார்க்க

கிண்டி: அரசு மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்? - கைதான இன்ஜினீயர்; விசாரணையில் வெளிவந்த தகவல்

சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் பாலாஜி ஜெகநாதன் (55). இவர் இன்று காலை (13.11.2024) பணியிலிருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு ... மேலும் பார்க்க

சென்னை: நகைக்கடை ஓனருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் - தங்கம், வைர நகைகளைத் திருடியது எப்படி?

சென்னை தி.நகர் டாக்டர் நாயர் சாலையில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை சுரேஷ் என்பவர் நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி இந்த நகைக்கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை சமாளிக்க ... மேலும் பார்க்க

கிண்டி: ``அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை"- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்தி இருக்கின்றனர்.பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புற்றுநோய் துறை மருத்... மேலும் பார்க்க

கிண்டி: `அம்மாவுக்கு சரியா சிகிச்சை அளிக்கல’ மருத்துவருக்கு கத்திகுத்து; போராட்டத்தில் மருத்துவர்கள்

சென்னை கிண்டியில் அரசு பன்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு சரியாக சிகிச்சை அளி... மேலும் பார்க்க