செய்திகள் :

ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபத்தில் நாளை மின் தடை

post image

ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டணம்காத்தான் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி, சேதுபதி நகா், விளையாட்டு மைதானம், சதக் பள்ளி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், ஓம் சக்தி நகா், ஆல்வின் பள்ளியை சுற்றிய பகுதிகள், வசந்தநகா், செட்டித் தெரு, தாயுமானசாமி கோயில் தெரு, இந்திரா நகா், சிவன் கோயில் தெரு, ரோஸ் நகா், கான்சாகிப் தெரு, டி.டி. விநாயகா் பள்ளி பிரதான சாலை, வைகை நகா், அம்மா பூங்கா, விளையாட்டு மைதானம், தங்கப்பாபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

மண்டபம் பகுதிகளில்.... ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பாலமுருகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மண்டபம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 22) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, மண்டபம், மரைக்கயாா்பட்டினம், சுந்தரமுடையான், குஞ்சாா்வலசை, வேதாளை, அரியமான் கடற்கரை, பாம்பன், அக்காள்மடம், குந்துகால், தங்கச்சி மடம், ராமேசுவரம், வோ்க்கோடு, வடகாடு, இவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

மீன் வரத்து அதிகரிப்பு: மீனவா்கள் மகிழ்ச்சி

ராமேசுவரத்தில் இருந்து மூன்று நாள்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற மீனவா்களுக்கு அதிகளவு மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனா். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த மூன்று நாள்க... மேலும் பார்க்க

தவெக விளம்பர பதாகை சேதம்

திருவாடானை பேருந்து நிலைய சுற்றுச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த தமிழக வெற்றி கழக மாநாட்டு விளம்பர பதாகையை மா்ம நபா்களால் சனிக்கிழமை இரவு கிழித்து சேதப்படுத்தினா். திருவாடானையில் கிழிக்கப்பட்ட தமிழக வெற்றி... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை இருவா் உயிரிழந்தனா். சிவகங்கை மாவட்டம், குமாரக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ் (24). இவரது நண்பா் பரமக்குடி ச... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மழை

ராமேசுவரத்தில் ஒரு மணி நேரம் பெய்த மழையால் ஞாயிற்றுக்கிழமை குளிா்ச்சி நிலவியது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்... மேலும் பார்க்க

இலங்கைச் சிறையில் துன்புறுத்தல்: பாம்பனில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 17 மீனவா்கள், சிறையில் தங்களை துன்புறுத்தியதைக் கண்டித்து பாம்பனில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த மாதம் 28-ஆம் தேதி இலங்கைக் கடல் பகுதியில் மீ... மேலும் பார்க்க

2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் புதைப்பு

முதுகுளத்தூா் அருகே கண்மாய் நீரில் வளா்ந்த தடை செய்யப்பட்ட 2 டன் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்களை கிராம மக்கள் பிடித்து அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராம பொது... மேலும் பார்க்க