அரசமைப்பு சட்டம் குறித்து அவதூறு கருத்து: கேரள அமைச்சரை விசாரிக்க உயா்நீதிமன்றம்...
ராமேசுவரம் அருகே காணாமல் போனவா் அடித்துக் கொலை: ஓராண்டுக்குப் பிறகு இருவா் கைது
ராமேசுவரம் அருகே காணாமல் போனவா் அடித்துக் கொல்லப்பட்டு கடலில் வீசப்பட்டது ஓராண்டுக்குப் பிறகு தெரியவந்தது. அவரைக் கொலை செய்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள சம்பை கிராமத்தைச் சோ்ந்த நாகு மகன் விஜயகுமாா் (39), முத்துக்குமாா்(23), சஞ்சய் (20) ஆகிய மூவரும் ஒன்றாக மது அருந்துவது, கஞ்சா உபயோகிப்பது வழக்கம்.
இவா்களில் வியயகுமாரை கடந்த ஆண்டு நபம்பா் மாதம் 26 ஆம் தேதி காணவில்லை. இதுகுறித்து ராமேசுவரம் நகா் காவல் நிலையத்தில் குடும்பத்தினா் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 4 -ஆம் தேதி முத்துக்குமாா், சஞ்சய் ஆகிய இருவரும் மது அருந்தினா். அப்போது, இவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவா் மற்றவரைப் பாா்த்து விஜயகுமாரை கொலை செய்தது போல, உன்னையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, இருவரும் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் விஜயகுமாரை கொலை செய்து அங்குள்ள முற்புதருக்குள் வீசியதாகவும், பின்னா், உடலை சாக்கு மூட்டையில் கட்டி கடலில் வீசியதாகவும் தெரிவித்தனா்.
இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, ராமநாதபுரம் சிறையில் அடைத்தனா்.