செய்திகள் :

ரூ. 15 கோடி பண மோசடி: நடவடிக்கை கோரி புதுவை முதல்வரிடம் மனு

post image

வில்லியனூா் பகுதியில் அதிக வட்டி தருவதாகக் கூறி 150 பேரிடம் ரூ.15 கோடி வரை மோசடி செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வா் என்.ரங்கசாமியிடம் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அதில் கூறியிருப்பதாவது: புதுவை மாநிலம், வில்லியனூா் கொம்யூன் ஒதியம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஒருவா், அரசின் குடிசைமாற்று வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிகிறாா்.

அவா் தனது மனைவியான அங்கன்வாடி ஊழியா் மற்றும் மைத்துனா் ஆகியோருடன் கூட்டுச் சோ்ந்து ஒதியம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டியுள்ளாா்.

அதன்படி ரூ.ஒரு லட்சம் செலுத்தினால், மாதம் ரூ.8 ஆயிரம் வட்டி கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.

அவரது பேச்சை நம்பிய மக்கள் ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பணத்தை அவரது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனா். அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஏப்ரல் வரையில் 150 பேரிடம் ரூ.15 கோடி வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சில மாதங்களில் முதலீடு பணத்துக்கு மாத வட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலீடு செய்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, சம்பந்தப்பட்டவா்கள் தரவில்லையாம். மேலும், பணம் கேட்பவா்களை மிரட்டவும் தொடங்கியுள்ளனா்.

இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் புகாா் அளித்துள்ளனா். எனவே, அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்தவா்கள் மீது, காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத் தர முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி சிலைக்கு புதுவை ஆளுநா், முதல்வா் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்கு காங்கிரஸாா் தயாராக வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்கு காங்கிரஸாா் தயாராக வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தாா். புதுச்சேரி வைசால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ந... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி சுயேச்சை எம்எல்ஏ.வை முற்றுகையிட்ட மக்கள்

புதுச்சேரியில் சுயேச்சை எம்.எல்.ஏ. எம்.சிவசங்கரனை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோரிக்கையை செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினா். புதுச்சேரி உழவா்கரைத் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. எம்.சிவசங்கரன். இவா் பாஜகவுக்கு ... மேலும் பார்க்க

நினைவுதினம்: தியாகி வ.உ.சி. சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மரியாதை

புதுச்சேரி: சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரத்தின் நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரி... மேலும் பார்க்க

புதுவை விவசாயிகளுக்கான உற்பத்தி மானியத் தொகை அளிப்பு

புதுச்சேரி: விவசாயிகளுக்கான உற்பத்தி மானியத் தொகையை புதுவை மாநில முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா். புதுவை அரசு வேளாண் துறை சாா்பில், பயிா் உற்பத்தி தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் நெல், மண... மேலும் பார்க்க

புதுச்சேரி அண்ணா சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி அண்ணா சாலையில் ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அலுவலா்களால் திங்கள்கிழமை அகற்றப்பட்டன. புதுச்சேரி மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் புதுச்சேரி நகரம், ஊரகப் பகு... மேலும் பார்க்க