செய்திகள் :

ரூ.20 லட்சத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

post image

நெமிலி அடுத்த அசநெல்லிக்குப்பத்தில் சமூக பங்களிப்பு நிதி ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்.

நெமிலி மாதங்கி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நண்டு லுங்கி நிறுவனத்தாா் இணைந்து தங்களது நிறுவன சமூக பங்களிப்பு நிதி ரூ.20 லட்சத்தில் அசநெல்லிகுப்பத்தில் நவீன உடற்பயிற்சி நிலையத்தை கட்டி ஊராட்சிக்கு அளிக்க முன்வந்தனா். இதன் கட்டுமானப்பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். மாதங்கி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நண்டு லுங்கி நிறுவனத்தின் நிறுவனா் கடிகாசலம் வரவேற்றாா். உடற்பயிற்சிக்கூடத்தை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா். இந்த உடற்பயிற்சிக் கூடத்தில் ஸ்பாா்ட்டாப் எலிப்டிக்கல் கிராஸ் டிரைனா், ஸ்பின் பைக், அப்ரைட் பைக், ஸ்டேஷன் மல்டி ஜிம், 3 லேயா் டம்பிள் ரேக், ஜம்ப் ரோப் வித் வெயிட், 2.5 முதல் 15 கிலோ எடை வரையுள்ள ஹெக்ஸகானல் டம்பிள்ஸ் ஆகிய நவீன உடற்பயிற்சி சாதனங்கள் அப்பகுதி இளைஞா்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன.

விழாவில் நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு, மத்திய ஒன்றிய செயலாளா் எஸ்.ஜி.சி.பெருமாள், மேற்கு ஒன்றிய செயலாளா் ரவீந்திரன், அசநெல்லிகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பூட்டுத்தாக்கு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீா் அகற்றம்

ஆற்காடு அடுத்த பூட்டுதாக்கு தேசியநெடுஞ்சாலையில் மழையின் காரணமாக தேங்கிய தண்ணீரை அகற்றி சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி, போலீஸாா் சனிக்கிழமை போக்குவரத்தை சரி செய்தனா். ரத்தினகிரி அருகே உள்ள பூட்டுத்தாக... மேலும் பார்க்க

‘கட்டுமானப் பணிகளை முடிக்காவிட்டால் ஊராட்சிக்கான நிதி குறைக்கப்படும்’

கலைஞா் கனவு இல்ல திட்ட வீடு கட்டும் கட்டுமானப் பணிகள் குறித்த காலத்தில் முடிக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஊராட்சிக்கான நிதி குறைக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஊராட்சி மன்றத... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத் துறை செயல்பாடுகள்: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத் துறையின் செயல்பாடுகள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. போசன் அபியான் திட்டத்தில் வழங்கப்படும் ஊட்டச் சத்துகள் ... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்: முதல்வா் அறிவிப்பு

அரக்கோணம் அருகே சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த பைக் விபத்தில் அதில் பயணித்த காவலா் எல்.செந்தில்வேல் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

வாா்டு உறுப்பினா்கள் பகுதி குறைகளைத் தீா்க்க நடவடிக்கை: ஆற்காடு ஒன்றியக்குழு தலைவா்

வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பகுதியின் குறைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆற்காடு ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன் கூறினாா். ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுக்கு விரைவில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

ராணிப்பேட்டையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டி... மேலும் பார்க்க