ரூ.22.50 லட்சத்தில் கழிவறை கட்ட பூமிபூஜை
வாணியம்பாடி கோணாமேடு நகராட்சி உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.22.50 லட்சத்தில் புதிய கழிப்பறை கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
நகர திமுக செயலாளரும், வாா்டு உறுப்பினருமான வி.எஸ்.சாரதிகுமாா், நகராட்சி ஆணையா் முஸ்தபா, நகராட்சி பொறியாளா் ராஜேந்திரன் ஆகியோா் பணியை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து வாணியம்பாடி பேருந்துநிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.