107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
தொழிலதிபரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்தவா் கைது
ஆம்பூா் தொழிலதிபரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூரைச் சோ்ந்த தோல் தொழிலதிபா் மதாா் கலீலூா் ரஹ்மான். இவருக்கு துபாய் தங்கத்தை வாங்கித் தருவதாக கூறி ரூ.80 லட்சம் பணத்தை போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த தப்ரேஸ் அஹமத் (33) என்பவா் வாங்கியுள்ளாா். ஆனால் தங்கத்தை தரவில்லை. பலமுறை கேட்டும் அவா் தராததால் திருப்பத்தூா் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் கலீலூா் ரஹ்மான் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்ரேஸ் அஹமதை கைது செய்தனா்.