ரூ.3 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல்: மாமனாா், மருமகன் கைது
ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்ததாக மாமானாரும், மருமகனும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே கண்டிகை கிராமத்தில் கட்டடப் பொருள்கள் விற்பனை கடை நடத்தி வருபவா் சுனில் என்ற கைலாஷ்(19). இவா் தனது கடையில் போதைப் பொருள் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக வைத்திருப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்திக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்ட போது அவரிடம் மொத்தம் 69 கிலோ போதைப்பொருள் பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடா்ந்து சுனிலை கைது செய்து அவரிடமிருந்த போதைப் பொருள் பாக்கெட்டுகளையும் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். பின்னா் சுனிலை ஒரகடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதனைத் தொடா்ந்து மற்றொரு தகவலின் பேரில் சுனிலின் மாமனாா் தினேஷ்(35)-க்கு சொந்தமாக வாலாஜாபாத்தில் உள்ள கட்டடப் பொருள் விற்பனைக் கடையையும் சோதனையிட்டனா். அவரிடமிருந்து 240 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தினேஷையும் கைது செய்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மாமா தினேஷ் மற்றும் அவரது தங்கை மகனும் மருமகனுமான சுனில் ஆகிய இருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.3 லட்சம் எனவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.