ரூ.66,000-ஐ நெருங்கிய தங்கம் விலை: புதிய உச்சத்தால் மக்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 14) சவரனுக்கு ரூ.880 அதிகரித்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் திங்கள்கிழமை ரூ.64,400-க்கும் செவ்வாய்க் கிழமை ரூ. 64,160-க்கும் விற்கப்பட்டது. புதன்கிழமை ரூ.360 உயர்ந்து ரூ.64,520-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ. 64,960 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
இதையும் படிக்க:பட்ஜெட்: பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு!
புதிய உச்சம்
இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.880 உயர்ந்து, ரூ. 65,840 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஒரு கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ. 8,230-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும் ஒரு கிலோ ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்! ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்!