லோகேஷ் கனகராஜ் பிறந்தாள்: கூலி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட விடியோ!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து விடியோவை கூலி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாகிர், ஷ்ருதி ஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்ததுள்ளது. இதில், குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.
இப்படத்தின் டீசர் அல்லது கிளிம்ஸ் விடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளான மார்ச் 14 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் லோகேஷ் பிறந்தநாளை முன்னிட்டு கூலி தயாரிப்பு நிறுவனம் பிறந்தாள் விடியோவை பகிர்ந்துள்ளது. சிறப்பாக எடிட் செய்யப்பட்ட அந்த விடியோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
நவீன சினிமாவை மாற்றியமைத்தவர் என சன் பிக்சர்ஸ் லோகேஷ் கனகராஜை வாழ்த்தியுள்ளது.
Wishing the super talented filmmaker who redefined modern cinema, @Dir_Lokesh a very happy birthday!#HBDLokeshKanagaraj#HappyBirthdayLokeshKanagaraj#HBDLokipic.twitter.com/5N7bECOZYG
— Sun Pictures (@sunpictures) March 14, 2025