செய்திகள் :

வக்ஃப் சட்டத்துக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு!

post image

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை கடந்த 17-ஆம் தேதி பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஐந்து மனுக்களை மட்டும் விசாரிக்கத் தீா்மானித்து, இந்த வழக்குக்கு ‘மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டது.

மேலும், மே 5 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதுவரை திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் வருகின்ற மே 13 ஆம் தேதியுடன் நிறைவுபெறவுள்ளதால், புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கவாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கின் விசாரணை வருகின்ற மே 15 ஆம் தேதி கவாய் தலைமையில் நடைபெறும் என்றும், இடைக்காலத் தடை நீட்டிப்பு குறித்து அவர் உத்தரவிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 7 அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை: மத்திய அரசு

புது தில்லி: மே 7-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போர் நடைபெறும்போது, குடிமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

மாற்றி யோசித்த பெற்றோர்.. 10-ஆம் வகுப்பில் தோல்வி.. கேக் வெட்டிக் கொண்டாட்டம்

விரைவில் தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், கர்நாடக மாநில பெற்றோர்கள், தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தேர்வில் தோல்வியட... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்!

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கிய இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள்(இணையவழி... மேலும் பார்க்க

தமிழக மீனவர்களைக் காக்க நடவடிக்கை: பவன் கல்யாண் வேண்டுகோள்!

தமிழக மீனவர்கள் இன்னலகள் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக மீனவர்களைக் காக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்... மேலும் பார்க்க

சுதந்திரத்துக்குப் பின்.. உ.பி. கிராமத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்

நாடு சுதந்திரம் அடைந்த பின் முதல் முறையாக உ.பி. கிராமத்தில் ஒரு மாணவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறார். மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு: தள்ளுபடி செய்தது அலாகாபாத் நீதிமன்றம்!

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வழக்கை அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்தி இந்தியா, பிரிட்ட... மேலும் பார்க்க