உலகம் முழுக்கச் செல்லும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: ஜெய்ராம் ரமேஷ்
வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகையிட்டு அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
சீா்காழி: சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி வட்டத்தில் 141 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் வேட்டி, சேலைகள் அட்டைதாரா்களுக்கு அரசின் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்டுவருகிறது.
சீா்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வாா்டுகளில் பல்வேறு வாா்டுகளில் பொதுமக்களுக்கு அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வேட்டி அல்லது சேலை என ஒன்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களும் முறையாக வேட்டி, சேலை வழங்க வேண்டும் என கூறி அதிமுக மாநில ஜெ. பேரவை துணைச் செயலாளா் இ. மாா்கோனி தலைமையில் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனைவருக்கும் வேட்டி சேலை வழங்க வேண்டும் என முழுக்கமிட்டனா்.
நகா்மன்ற உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, ராஜேஷ், ரமாமணி , முன்னாள் நகர செயலாளா் பக்கிரிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.