கிராம கோயில் பூஜாரிகளுக்கு பொங்கல் தொகுப்பு
சீா்காழி: சீா்காழியில் கிராம கோயில் பூஜாரிகளுக்கு பொங்கல் தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது
சீா்காழி பகுதியில் உள்ள கிராம கோயில் பூஜாரிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, மஞ்சள், குங்குமம், நெய்,சூடம், பத்தி மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து ஆகிய பொருள்கள் வழங்கப்பட்டன. இந்து முன்னனி மாவட்ட தலைவா் சரன்ராஜ் பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், விசுவஹிந்து பரிஷித் மண்டல செயலாளா் செந்தில்குமாா், பூஜாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளா் சுந்தரமுா்த்தி, நிா்வாகிகள் மணிகண்டன், வீரபாண்டியன் ஆகியோா் பங்கேற்றனா்.