25 முதல் 45 வயதுள்ள பெண்களை அதிகம் பாதிக்கும் தைராய்டு! காரணங்கள், சிகிச்சைகள் எ...
‘வருகிறோம்...’ மோகன்லாலின் த்ரிஷ்யம் - 3!
நடிகர் மோகன்லால் த்ரிஷ்யம் - 3 படத்திற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3 ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் இல்லையென்றாலும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நீதிமன்றக் காட்சியும் படத்தை வெற்றியடையச் செய்தன.
இதையும் படிக்க: ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
தொடர்ந்து, இந்தப் படத்தின் 3-வது பாகம் உருவாகும் என இயக்குநர் ஜீத்து ஜோசஃப் தெரிவித்திருந்தார். 2025 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் - 3 படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் மோகன்லால் ’த்ரிஷ்யம் - 3 உறுதியானது’ என அவருடன் ஜித்து ஜோசஃப் மற்றும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
The Past Never Stays Silent
— Mohanlal (@Mohanlal) February 20, 2025
Drishyam 3 Confirmed!#Drishyam3pic.twitter.com/xZ8R7N82un
மேலும், “கடந்தகாலம் அமைதியாகவே இருக்காது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால், படத்தின் பணிகள் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.