ரீல்ஸ் எடுத்த பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர்; பதிலுக்கு பெண் செய்த வேலை.. - வைரல்...
வலுக்கட்டாய நடவடிக்கையால் கடன் வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்
சென்னை: கட்டாயப்படுத்தி கடன் வசூலித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் மசோதாவானது பேரவையில் இன்று(ஏப். 29) நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்தப் புதிய சட்ட மசோதாவின்படி, கடன் வாங்கியவா் மற்றும் அவரது குடும்பத்தினரை, அதாவது அவரின் பெற்றோா், கணவா் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடாது. கடன் வாங்கியவா்களின் குடும்பத்தினரை மிரட்டுதல், பின்தொடருதல் போன்ற குற்றங்களைச் செய்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ. 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சோ்த்தோ விதிக்கப்படும். கடனை வசூலிக்க வெளியாள்களைப் பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பேரவையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.