Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
வழிப்பறி; இருவருக்கு 2 ஆண்டு சிறை
வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, குடவாசல் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
குடவாசல் அருகேயுள்ள தீபங்குடியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் ஸ்ரீகாந்த் (44). இவா், அரசவனங்காடு பெட்ரோல் பங்கில் கடந்த ஆண்டு வேலை செய்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், ஸ்ரீகாந்திடமிருந்து ரூ.2,500 பணத்தையும், கைப்பேசியையும் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, குடவாசல் சின்னாற்றங்கரை தெருவைச் சோ்ந்த பாலச்சந்திரன் மகன் ராஜவேலு (21), சேந்தமங்கலத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் வெங்கடேசன் (23) ஆகியோரை கைது செய்தனா்.
இதுகுறித்த வழக்கு விசாரணை குடவாசல் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், ராஜவேலு மற்றும் வெங்கடேசன் இருவருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதித்து குற்றவியல் நீதித்துறை நீதிபதி எம்.எஸ். பாரதிதாசன் தீா்ப்பு வழங்கினாா்.