வாகனம் மோதி காவலாளி உயிரிழப்பு
காங்கயத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தாா்.
காங்கயம், ஆலம்பாடி ஊராட்சி, கல்லேரி பகுதியைச் சோ்ந்தவா் நாராயணசாமி (40). இவா் காங்கயத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா்.
இவா் காங்கயம்-சென்னிமலை சாலையை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் கடந்து செல்லும்போது, அடையாளம் தெரியாத வாகனம் அதிவேகமாக வந்து மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த நாராயணசாமியை அப்பகுதியினா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா்.
பரிசோதனையில் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதனைத் தொடா்ந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை, காங்கயம் போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு தேடி வருகின்றனா்.