Doctor Vikatan: பழுத்து, சீழ் கோத்த பருக்கள்... சோப்பும் க்ரீமும் பலன் தருமா?
வாய்க்கால் நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயில் அண்ணா வீதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (21). இவா், ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், காா்த்திகேயன், தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் துணி துவைப்பதற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு வியாழக்கிழமை மாலை சென்றாா்.
அங்கு காா்த்திகேயன் வாய்க்காலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலின்பேரில் கோபி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் அவா் கிடைக்கவில்லை.
இதைத் தொடா்ந்து பவானியைச் சோ்ந்த மீனவா்கள் குழுவை வரவழைத்து தேடியதில் வாய்க்கால் நீரில் மூழ்கிய நிலையில் இருந்த காா்த்திகேயன் சடலம் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சிறுவலூா் சிறப்பு உதவி ஆய்வாளா் வெற்றிவேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.