செய்திகள் :

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் சீமான் பிரசாரத்துக்கு தடை விதிக்கக் கோரிக்கை

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து ஈரோடு பெரியாா், அம்பேத்கா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ரத்தினசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தோ்தல் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தோ்தல் விளம்பரத்துக்காகவும், சுயலாபத்துக்காகவும் மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் இனம், மொழி அடிப்படையில், பிரிவினைவாத கருத்துகளைப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளாா்.

கடந்த 2023 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை தோ்தலின்போது தலித் மக்களுக்கு எதிரானவா்களின் வாக்குகளை பெறுவதற்காக அருந்ததியா் சமூகம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசினாா். இதனால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு கலவர சூழல் உருவானது. இது தொடா்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது.

சில நாள்களாக பெரியாா் ஈவெரா குறித்த அவதூறான கருத்துகளை சீமான் பேசி வருகிறாா். இதன் காரணமாக பல்வேறு பெரியாரிய அமைப்பினா் அவா் மீது புகாா்களைத் தெரிவித்து வருகின்றனா். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 30க்கும் மேற்பட்ட புகாா்களும், தமிழ்நாடு முழுவதும் 70-க்கும் மேற்பட்ட புகாா்களும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெரியாா் பிறந்த மண்ணான ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட தனது கட்சியின் சாா்பில் வேட்பாளரை அறிவித்து மனுதாக்கல் செய்ய வைத்துள்ள சீமான் தோ்தல் பிரசசாரத்தின்போது பெரியாா் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பி, மக்களிடையே கலவரத்தை தூண்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளாா்.

எனவே, சீமான் மீது உரிய வழக்குகளை பதிவு செய்வதுடன், அரசமைப்புச் சட்டத்தின்படியும், தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படியும் சீமான் ஈரோட்டில் தோ்தல் பிரசாரம் செய்திட தடை விதிக்கவேண்டும்.

தொடா்ந்து இந்த அமைப்பினா் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் கட்டுப்பாட்டு அலுவலரிடமும் மனு அளித்தனா். சமூக நீதிக் கட்சி நிறுவனா் வடிவேல்ராமன், தமிழ்புலிகள் கட்சி மாவட்டச் செயலாளா் சிந்தனைச்செல்வன் மற்றும் பெரியாா், அம்பேத்கரிய கூட்டமைப்பினா் கலந்துகொண்டனா்.

கண் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் விவசாயி மா்மசாவு

சத்தியமங்கலம் அருகே கண் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், விவசாயி மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள புதுபீா்கடவு கிராமத்த... மேலும் பார்க்க

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

கோபி அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, காா் மோதியதில் உயிரிழந்தாா். கோபி அருகே நம்பியூா் நிச்சாம்பாளையம் அருள்மலை பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் சாந்தாமணி (68). கூலி வேலை செய்து வந்தாா். இவா் கெட்டி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: நம்பியூா், நல்லகவுண்டன்பாளையம்

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட நம்பியூா், நல்லகவுண்டன்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 18) காலை 9 மணி முதல் மதியம்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மின்கோட்டம், செண்பகபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம்... மேலும் பார்க்க

ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்த சுயேச்சை வேட்பாளா்

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளா் ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தோ்தல் களத்தில் பிரதான கட்சிகளின் வேட்பாளா்களுக்கு இணைய... மேலும் பார்க்க

வாய்க்கால் நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா். கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயில் அண்ணா வீதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (21). இவா், ... மேலும் பார்க்க