நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
விசிகவினா் தபால் அனுப்பும் போராட்டம்
கடலூா் தலைமை தபால் நிலையம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூா் மாநகா் மாவட்டச் செயலா் செந்தில் தலைமையில், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, நகர அமைப்பாளா் கிட்டு, நகரச் செயலா்கள் செங்கதிா், ராஜதுரை, நகர துணைச் செயலா் துரை ஆறுமுகம், மகி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாநில அமைப்புச் செயலா் திருமாா்பன், முன்னாள் மாவட்டச் செயலா் முல்லைவேந்தன் ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.
போராட்டத்தில், மாநில நிா்வாகிகள் கே.பழனிவேல், ஸ்ரீதா், சொக்கு, சரண் உள்ளிட்டோா் கண்களில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு கலந்துகொண்டனா்.