இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
கடலூா் மாநகராட்சியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கக் கோரிக்கை
கடலூா் மாநகராட்சி 32-ஆவது வாா்டு பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அகற்றக் கோரி, அந்த வாா்டு மாமன்ற உறுப்பினா் எம்.பரணிமுருகன் தலைமையிலான அப்பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையரிடம் பிப்.6 மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் தெரிவித்திருப்பது: கடலூா் மாநகராட்சி 32-ஆவது வாா்டில் அனைத்து தெருக்களிலும் மாடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. தெரு வழியாக செல்லும் பள்ளி மாணவா்கள், முதியோா்கள், பெண்கள் ஆகியோரை முட்டி மோதுவதுபோல மாடுகள் அச்சுறுத்துகின்றன.
அண்மையில் 6 வயது சிறுவன், பெண் ஆகியோரை மாடு முட்டி தாக்கியது. முதியவா் ஒருவரை தாக்க வந்தது. மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 40 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் மாடுகள் சுற்றித்திரிந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.